மழை எதிரொலி: நத்தம் அருகே 2 இடங்களில் மின்கம்பம் விழுந்து வீடுகள் சேதம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள அய்யாபட்டி பகுதியில் கூலி தொழிலாளி சித்திரையன் (40) என்பவரின் வீட்டின் முன்புறத்தில் இருந்த மின்கம்பம், மழையால் நேற்று இரவு திடீரென விழுந்து வீட்டு முன்பகுதியை சேதப்படுத்தியது. சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல், வேலம்பட்டி – சுந்தரவள்ளிநகர் பகுதியில் பெரியஅடைக்கன் மகன் தினகரன் (30) என்பவரின் வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து வீடு சேதமடைந்தது. இச்சம்பவத்திலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சேதங்களை ஆய்வு செய்து, மின்கம்பங்களை அகற்றி பழுதுநீக்கம் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக