நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - 29ஆம் தேதி தேரோட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் - கோவில்பட்டியில் மேற்கு பார்த்த சிவாலயங்களில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் வைகாசி திருவிழா வியாழன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஹோமம் கணபதி நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் மேளதாளம் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும். தீபாராதனைகளும் நடந்தது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில்
சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் அம்மன் சிம்மம், மயில் , பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. மறுநாள்
பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. சிவம் சாந்தி காலை உற்சவ நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் அதிகாரிகளும், கோயில் குருக்களும் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக