ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து எஸ் வி ஜி வி பள்ளி மாணவி உலக சாதனை வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம்!!


கோவை காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிகுலேஷன் பள்ளி எல் கே ஜி மாணவி ஷ்ரத்தா (வயது4). ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் காரமடையில் உள்ள ஜென் வாரியார் அகாடமியில் கராத்தே பயிற்சி பெற்றறுள்ளார்.சாதனை மாணவியை எஸ் வி ஜி வி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளித்தாளாளர் டாக்டர் பழனிச்சாமி முதல்வர் சசிகலா, பள்ளி நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ரத்தினசாமி அறங்காவலர்கள் தாரகேஸ்வரி வேலுச்சாமி ராஜேந்திரன் மற்றும் நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

மாணவியின் சாதனை குறித்து ஜெம் வாரியர் அகாடமி மாஸ்டர் சஞ்சீவி கூறியதாவது. இந்த மாணவி எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஏற்கனவே ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 18 டைல்ஸ் உடைத்து சாதனையாக இருந்தது. தற்போது ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதை வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்  சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளது. சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை எங்கள் மகள் நிரூபித்துள்ளார். வரும் காலங்களில் பல்வேறு உலக சாதனைகள் செய்வார் என அவரது பெற்றோர்கள் ஸ்ரீதர் நீத்து ஆகியோர் தெரிவித்தனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!