இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் தமிழ்நாடு கிளையின், 257வது மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் தமிழ்நாடு கிளையின், 257வது மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி மாவட்ட துணை தலைவர் ராஜா பழனிசாமி தலைமை தாங்கினார். ஐஎன்டியூசி, சிடிசி இணை செயலாளர் ராஜேஷ் பிரேம் குமார் முன்னிலை வகித்தார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்ணுபிரசாத், கலந்து கொண்டு ஐஎன்டியூசி அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு எடுத்து கூறினார். தொடர்த்து செய்தியாளர்களிடம் கூறிய விஸ்ணுபிரசாத் கூறியதாவது..

தமிழ்நாடு ஐஎன்டியூசி சார்பாக, மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்று வருகின்றது. தமிழகம் புதிய பாதையில் தனது பயணத்தை துவங்கியுள்ளது. இதற்க்கு காரணம் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அரசியல் என்றால் இப்படிதான் என்று கடந்த 60 ஆண்டுகளாக ஒரு திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது அதை மாற்றி இனி தமிழகம் என்றால் இப்படித்தான் இருக்கும், என்று தெரிவித்துள்ளார். இதில் மக்கள் பணம் தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று மக்களிடம் விஜய் தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கையை ஏற்று மக்கள் அவருக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளனர். அதனை அவர் சிறப்பாக செய்வார் என நம்புவதாக தெரிவித்தார். இனி தமிழகம் நல்ல பாதையில் பயணிக்கும் என தெரிவி்த்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பானந்தம், ஐஎன்டியூசி மாநில நிர்வாகிகள், பன்னீர் செல்வம், கோவை செல்வம், ராமகண்ணன், நாராயணசாமி, பிரியங்கா காந்தி தொழிற்சங்க செயளாலர் பட்டீஸ்வரன், மற்றும் நிர்வாகிகள், மாரிமுத்து, சரவணக்குமார், மதியழகன், சமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!