பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்காலிக பணியாளர்கள் 25 பேரை பணி நீக்கம் செய்ய தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!!


பழனியை சேர்ந்த எம்.நாச்சிமுத்து, ம.மரகதம் உள்ளிட்ட 25 பேர் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தற்காலிக தூய்மை பணியாளர், செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எங்களுக்கு பணி வழங்க மறுக்கிறது.

இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் இன்று விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் திருமுருகன் வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பழனி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளர், செவிலியர் உதவியாளர்களாக பணிபுரிந்து வரும் மனுதாரர்கள் 25 பேரையும் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து நீக்கக் கூடாது. மனு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் இயக்குனர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ கூறியுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!