நத்தம் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள அய்யனார்புரம் அடைக்கலநாதர் சிற்றாலயத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் விடுதியில் 1980 முதல் 2003 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து சந்தித்து மகிழ்ந்தனர்.

இதில் ஜெபசீலன் சந்தோஷ் குமார், கருப்பு ராஜா ஆகிய முன்னாள் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர்கள், பத்திரப்பதிவுத் துறை, வேளாண்துறை, சித்த மருத்துவம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்கள் தங்களுக்கிடையே பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், தற்போது நிதி நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு உதவிகள் வழங்கினர்.

இந்த சந்திப்பு மூலம் பழைய நட்புகளை புதுப்பித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், இனிவரும் காலங்களிலும் இத்தகைய சந்திப்புகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!