குடியாத்தம் நகரில் பாரம்பரிய அரிசி திருவிழா 2026 ஓய்வு பெற்ற ஆசிரியர். சிவசங்கரன் அவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது!!
வேலூர்மாவட்டம்,குடியாத்தத்தில் பாரம்பரிய அரிசி திருவிழா செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று வழக்கறிஞர். கே.எம். பூபதி அவர்களுடன் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் தமிழக முழுவதிலிருந்து பல்வேறு இயற்கை விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் பங்கு பெற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து நமக்கு அன்றாடம் கிடைக்க மிக அரிதான பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், குறைந்த விலையில் இங்கே கிடைப்பதை காண முடிந்தது.
நாம் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வாங்க வேண்டும் என்றால் அவற்றை தேடி அலைய வேண்டிய நிலையில், அனைத்து பொருட்களையும் ஒரே இடங்களில் ஒருங்கிணைத்து கிட்டத்தட்ட 100 கடைகளுக்கு மேல் அமைத்து ஒரு மாபெரும் விஷயத்தை நடத்தி காட்டி இருக்கிறார்கள் நம்முடைய இயற்கை ஆர்வலர்கள். அவர்களின் இந்த முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்!!
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக