திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 'நான் முதல்வன்' வேலைவாய்ப்பு முகாம்: 200 பேருக்கு பணி நியமன ஆணை!!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் மாநில அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 9-5-2026 சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஆண்டோ அலோசியஸ்  வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு தலைமை தாங்கி முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக 'நான் முதல்வன்' திட்டத்தின் புதுக்கோட்டை மாவட்ட திட்ட மேலாளர் அன்பழகன்,  திட்ட உதவியாளர்கள் ஜெயகுமார் மற்றும் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

 அவர்கள் பேசுகையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த அரசு செயல்படுத்தி வரும் 'நான் முதல்வன்' திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கினர்.

இந்த முகாமில் எம்.ஆர்.எப் , டி.வி.எஸ் ட்ரைனிங் சர்வீஸஸ், மதர்சன் நிறுவனம்,

லூக்காஸ் டிவிஎஸ், ரானே ஆட்டோ மோட்டிவ்

 உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களைத் தேர்வு செய்தன.

முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக் குழுவினர் மற்றும் 'நான் முதல்வன்' திட்டக் குழுவினர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மனிதவளத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பல கட்டங்களாகத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை நடத்தினர். இதில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய  மாணவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட  பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முடிவில், இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!