1987 வன்னியர் இட ஒதுக்கீட்டு துப்பாக்கி சூட்டில் இறந்த கோலியனூர் கோவிந்தன் அவர்களின் மனைவி ராணி அம்மாள் அவர்களுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!!

1987 வன்னியர் இட ஒதுக்கீட்டு துப்பாக்கி சூட்டில் தனது இன்னுயிரை தியாகம் செய்த கோலியனூர் கோவிந்தன் அவர்களின் மனைவி ராணி அம்மாள் அவர்களுடன்.

எனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் திருவிழா ஒரு வாரமாக நடைபெற்று  வருகிறது. சுத்துபட்டு கிராமத்து வன்னியர் வகையறாவினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயமாக நடத்துவார்கள். அதில் எட்டாவது நாள் பூங்கரகம் திருவிழா தொடர்ந்தனூர் வன்னியர் வகையறா நடத்துவது வழக்கம்.

கோலியனூர் சிவன் கோவிலில் பூங்கரகம் ஜோடித்து அதை சுமந்து, பல்வேறு வீதிகளில் பயணித்து இறுதியாக புத்துவாயம்மன் கோவிலில் வைப்பது வழக்கம். அப்படி நேற்று இரவு நடைபெற்ற விழாவில் நமது உறவுகளுடன் நானும் கலந்து கொண்ட போது, 1987-ல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு தொடர் சாலை மறியலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்கேற்று தனது இன்னுயிரை தியாகம் செய்த கோலியனூர் கோவிந்தன் அவர்களின் மனைவி திருமதி ராணி அம்மாள் அவர்கள் என்னையும், எனது மகனையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எங்களை கண்டதும் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம். எங்கள் குடும்பத்தினரை நலம் விசாரித்து வாழ்த்தினார்கள்.

குறிப்பு: நான் 3 வயதில் பால்வாடி படிக்கும்போது எனக்கு பால்வாடி ஆயாவாக இருந்து, உணவையும் அன்பையும் சேர்த்து ஊட்டியவர் தான் இந்த ராணி அம்மாள். அடுத்த இரண்டு வருடத்தில் (1987) கோலியனூர் கூட்ரோட்டில் நடந்த வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட துப்பாக்கி சூட்டில் தனது கணவரை பலி கொடுத்து நிலை தடுமாறி தனி மரமாக நின்றார். 24 வயதில் விதவை. 2 பெண் குழந்தைகளுக்கு தாய். இந்த நிகழ்வு என்னை சிறுவயதிலிருந்தே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால் எப்போது அவரை நேரில் பார்த்தாலும் அவர் என் மீது சிறுவயதில் செலுத்திய அன்பும், இட ஒதுக்கீட்டு போராட்ட நிகழ்வுகளும் என் ஆழ் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.!

பாமக தலைவர். அன்புமணி ராமதாஸ்! 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!