சோழவந்தான் பேரூராட்சி 17 வது வார்டு நாடார் புது தெருவில் ஜல்லி கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆன நிலையில் சாலை அமைக்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் பால்குடம் அக்னிச்சட்டி பூக்குழி நிகழ்ச்சிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிலையில் பக்தர்கள் செல்லும் பாதையானது ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட்டு பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக வேதனை! 

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு 17 வது வார்டு நாடார் புது தெரு பகுதியில்  சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாக சாலை அமைக்காததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது நாளை 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குடம் அக்கினி சட்டி நிகழ்ச்சியும் 27ஆம் தேதி புதன்கிழமை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 இதற்காக காப்பு கட்டிய பக்தர்கள் சுமார் 10,000 பேர் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர் அப்போது  பக்தர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் என சுமார் 50,000ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்கு வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் சோழவந்தால் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லி கற்கள் கொட்டி சாலை அமைக்காமல் உள்ளது இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்த நிலையில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் மொபைல் மூலமும் நேரிலும் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை சாலை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 

இந்த நிலையில் சோழவந்தான் பேரூராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள நாடார் புது தெருவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குள் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் அபிராமி சந்தோஷ் கூறுகையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை  அமைக்கப்படாமல் உள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் ஜெனகை மாரியம்மன் கோவில் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி நிகழ்ச்சிகள் உள்ளது கோவில் பகுதி அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மாற்று பாதையாக நாடார் புது தெரு வழியாகத்தான் பொதுமக்கள் பக்தர்கள் செல்ல வேண்டும் மேலும் அக்னி சட்டி எடுப்பவர்கள் அக்னி சட்டி வாங்குபவர்கள் நாடார் புது தெருவில் உள்ள பகுதிக்கு சென்று வாங்க கூடிய நிலையில் இந்த சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

இது குறித்து மூன்று முறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரிலும் மொபைல் போனிலும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஆகையால் வேறு வழியின்றி தற்போது சாலை மறியல் செய்ய வேண்டிய வேலைக்கு  நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் இன்று மாலைக்குள் தற்காலிக சாலை வசதி செய்து தராவிட்டால் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறோம் ஆகையால்  பொதுமக்கள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக 17 வது வார்டுக்கு உட்பட்ட நாடார் புது  தெருவில் உள்ள மோசமான சாலையை சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!