மலினமாகும் தொழிலாளர்களின் உயிர்கள் – முதலாளிகள் கொழுக்க புதிய தொழிலாளர் சட்டங்கள் - மே 17 இயக்கம்!!

முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி இறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தை  மாற்ற விவாதத்திற்கு கூட வைக்காமல் அவசரம் காட்டிய மோடி அரசு, தொழிலாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து ஒரு அக்கறையும் காட்டுவதில்லை. சத்தீசுகரில் ஏப்ரல் 14, 2026-ம் ஆண்டு வேதாந்தா அனல்மின் நிறுவனத்தின் கொதிகலன் வெடித்து 25 தொழிலாளர்கள் பலியாகினர். கொதிகலன் உலைக்குள் அதிகப்படியான எரிபொருள் தேங்கியதால் அழுத்தம் காரணமாக வெடித்ததாகக் கண்டறியப்பட்டது. அந்தக் கொதிகலனில் பிரச்சனை இருப்பதாக 4 நாட்கள் முன்பே தொழிலாளர்கள் சொல்லியிருக்கின்றனர். ஆனால் வேதாந்தா நிறுவனத்தின் அலட்சியத்தினால் இவ்வளவு உயிரிழப்புகள் நடந்தன.

கனிம வளத்தில் நான்காவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் கனிம சுரங்கங்களில் 80% ஒப்பந்தப் பணியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். தங்கம், செம்பு நிலக்கரி, மைகா, யுரேனியம், பாக்சைட், மாங்கனீசு போன்ற கனிம சுரங்கங்கள் வெட்டி எடுக்கும் ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, சத்திசுகர், மேற்கு வங்கம், மகாராசுடிரா போன்ற மாநிலங்களில் சுரங்கத் தொழிலாளர்கள் கடுமையான உயிர் கொல்லி நோய்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். பணிப்பாதுகாப்பும் இல்லாமல் குறைவான ஊதியத்திற்கு உயிரைப் பணயம் வைக்கும் தொழில்களில் சிறார் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிற கொடூரமான நிலையே இன்றும் அங்கு நீடிக்கின்றன. நிரந்தர வேலைக்கு ரூ33000 ஊதியம் அடிப்படை என்பதால் ரூ 12000 ஊதிய அடிப்படையில் ஒப்பந்த ஊழியரே அதிகம் சேர்க்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் 20 லட்சம் தொழிலாளர்கள் வரை ஒப்பந்தக் கூலிகளாக இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  

-மே -17 இயக்கம்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!