மே 16 முதல் ஜூன் 20 வரை நிற்காத எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல ஏற்பாடு!!


அரக்கோணம் மே 14 மே 16 முதல் ஜூன் 20 வரை இங்கு நிற்காத எக்ஸ்பிரஸ் ரயில்  அரக்கோணத்தில் நின்று செல்ல அனுமதிக்கபட்டு உள்ளதாக அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் அறிக்கை வெளியிடு அதில் கூறப்பட்டு உள்ளதாவது நமது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் பொறுப்பாளர்களாகிய நைனா மாசிலா மணியும் பொருளாளர் ஏகாம்பரம், துணைத்தலைவர்கள் ஷாநவாஸ்,டைபி சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் ப. எஸ்வந்தராவ், செய்தி தொடர்பாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் வெங்கட நரசிம்மன், யாழன்ஆதி ஆகியோர் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை அவர்களின் அழைப்பின் பேரில் சந்தித்தோம். பல ஆண்டுகளாக செயல்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த திருவாலங்காடு -- அரக்கோணம் நான்கு வழி ரயில் போக்குவரத்துக்குத் தேவையான தண்டவாள இணைப்பு) பணிகளை எதிர்வரும் மே 16ந்தேதி முதல் ஜூன் 21ந்தேதிவரை மேற்கொள்ள அதிகாரபூர்வ பணி ஆணை (Work Orders)  வந்துவிட்டதாகவும் இதன் காரணமாக பயணியர் வண்டிகளின் இயக்கத்தில் குறிப்பாக அரக்கோணம் - திருவாலங்காட்டிற்கு இடையே பெரிய அளவில் மாற்றங்கள்  இருக்கும் என்று நமக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதனால் பயணிகளுக்கு ஏற்பட இருக்கும் சிரமங்களை நாம் சுட்டிக்காட்டியும், இது தவிர்க்க முடியாத நிலை என்றும் வேண்டுமானால் காலை நேரத்தில் இங்கு நிற்காமல் சென்றுகொண்டிரு பழக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களை தற்காலிகமாக நிறுத்தி அனுப்ப ஏற்பாடு செய்துத்தரவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!