தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள்,4 இரட்டைக் கொலைகள்,19 பாலியல் குற்றங்கள்!- எதிர்க்கட்சி தலைவர். உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!!
தமிழகத்தில் மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை, கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக