அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழாவின் இரண்டாம் நாளான இன்றும், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கிரிவலம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழாவின் இரண்டாம் நாளான இன்றும், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கிரிவலம் சென்று வருகின்றனர்.
சித்ரா பௌர்ணமி திதியானது நேற்று இரவு 9:58 மணிக்குத் தொடங்கி இன்று இரவு 11:08 மணிக்கு நிறைவடைய உள்ளதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பக்தர்கள் வசதிக்காகவும் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் 'அண்ணாமலையாரோ... அண்ணாமலையாரோ...' என்ற பக்திக் கோஷங்களுடன் பக்தர்கள் மலையைச் சுற்றி வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் சிறப்புப் பேருந்து சேவைகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் ஆன்மீகப் பெருமைகளையும் பண்பாட்டுத் திருவிழாக்களையும் துல்லியமாக உங்களுக்கு வழங்கி வரும் நமது ஆந்தைரிப்போர்ட்டர், கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பயணத்தை மேற்கொள்ள வாழ்த்துகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக