அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உண்டியல்கள் இன்று(12.05.2026) எண்ணப்பட்டது!!
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உண்டியல்கள் இன்று.(12.05.2026) எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் இணை ஆணையர் ஹரிஹரன், மதுரை கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணையர்,பிரதிபா, மேலூர் ஆய்வர் கார்த்திகா தக்கார் பிரதிநிதி ஆவுடையம்மாள் , திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ரம்யா சுபாஷினி, அருணா தேவி,மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரொக்கமாக ரூ 71,36,136/=ம் பொன் இனம் 39கிராம் மற்றும் வெள்ளியினம் 65 கிராம் கிடைக்கப்பெற்றன.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக