அரக்கோணத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 120 மாணவர்களுக்கு சான்றுகள் ரோட்டரி சங்க ஆளுநர் வழங்கினார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் குமினி பேட்டையில் எஸ் ஆர் எஸ் தொழிற் கல்வி அகாடமி செயல்பட்டு வருகிறது இந்த அகாடமி தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் ஜே சி பி ஆப்ரேட்டர் மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்திடது இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் மனோகர் பிரபு தலைமை தாங்கினார் அகாடமி நிர்வாக அலுவலர் பாரதி ராஜா வரவேற்றார் ரோட்டரி சங்க தலைவர் வி சுரேஷ் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் தரப்பில் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தொழில்நுட்ப இயக்குனர் பிரகாஷ் மற்றும் மூத்த நிர்வாகிகள் மணி இளங்கோ சந்துரு ஹரி கஜபதி ராஜேஷ் பெருமாள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர் இறுதியில் அகாடமி முதல்வர் பிரியங்கா செந்தில்குமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக