10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது!!
➤➤. சென்னை மயிலாப்பூர் பகுதியில் சேர்ந்த 10 வயது சிறுமி வட சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார்.
➤➤. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் 23ம் தேதி அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்கின்ற பாம்பு தினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அழைத்து சென்றுள்ளார்.
➤➤. தனது அறைக்கு சிறுமி அழைத்துச் சென்ற பாம்பு தினேஷ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
➤➤. மேலும் தான் அத்துமீறலில் ஈடுபட்டதை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
➤➤. தனக்கு நேர்ந்த கொடுமைகளை மயிலாப்பூரில் உள்ள தனதுவீட்டிற்கு சென்ற சிறுமி சித்தியிடம் கூறியுள்ளார்.
➤➤. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த 3ம் தேதி இதுகுறித்த புகாரை சிறுமியின் பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
➤➤. போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் நான்காம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர்.
➤➤. ஆனால் தினேஷ் ஆர் கே நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்கு சென்றிருந்ததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
➤➤. கைது செய்யப்பட்ட தினேஷ் 43வது வார்டு தமிழக வெற்றிக் கழகவட்டச் வட்டச் செயலாளர் என்பதும் ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன சேர்ந்து அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர்
சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக