பாட்டிலுக்கு 10 ஏன்? ஒரே நாளில் சினிமா மாதிரி மாத்திட முடியாது அமைச்சர். விக்னேஷ்!!

பாட்டிலுக்கு ரூ.10 ஏன்? சினிமா போல் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது.. அமைச்சர் விக்னேஷ் ஓபன்டாக் கோவை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடியான திட்டங்கள் நடந்து வருவதாக கூறிய அமைச்சர் விக்னேஷ், நீண்ட கால தொடர் செயல்பாடுகளின் மூலமாகவே பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதை நிறுத்த முடியும் என்று திமுக ஆட்சியில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக கரூரில் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய், 10 ரூபாய் செந்தில் பாலாஜி என்று ஒரு பாடலையே பாடினார். இதனால் தவெக ஆட்சி அமைந்த பின், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்க மாட்டோம் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போதும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் ஊழியர்கள் பலரும் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தனர். பாட்டில்களை கைப்பற்றி பாதுகாக்க தனி குடோன், அட்டை பெட்டிகளுக்கான செலவு, பாரில் பணியாற்றுவோருக்கு ஊதியம் என்று பல்வேறு கணக்குகளை கூறினர்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!