அரக்கோணம் டவுன்ஹால் சங்க சார்பில் நடைபெற்ற 106-வது பொது மகாசபைக் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோண நகரத்தில் நூற்றாண்டுகள் பழமை கொண்ட டவுன்ஹால் சங்கம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தின் அங்கத்தினர்களாக 600ற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் இந்த சங்கத்தின் 106-வது பொது மகாசபைக் கூட்டம் தமிழ்த்தாய் பாடலுடன் சங்க தலைவர் அரிமா ஜிகே பாபுஜி தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தின் துவக்கத்தில் வாழ்நாள் அங்கத்தினர் இளங்கோ பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்ந்து இயற்கை எய்திய வாழ்நாள் அங்கத்தினர்கள் பெரியசாமி

சுபாஷ் மணி தேவன்பு பூபதி ஹனிபா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டது பின்னர் இணைச்செயலாளர் (நிர்வாகம் பூபதி வரவேற்று பேசினார்.

சங்க பொதுச்செயலாளர்.டாக்டர் பன்னீர்செல்வம் ஆண்டறிக்கை : வாசித்தார் பொருளாளர் முனுசாமிநிதி அறிக்கை வாசித்தார்.

வாழ்நாள் அங்கத்தினர்கள் சேர்க்கை குறித்து. பல்வேறு துணை குழுக்கள் அமைப்பது குறித்து. நகர சங்க அலுவல்களை சீர்படுத்துவது குறித்து. இன்பச் சுற்றுலா ஆண்டுதோறும் செல்வது குறித்து. திருமண மண்டபத்தை மேம்படுத்துவது குறித்து.  2025-2026 நிதி ஆண்டிற்கான உட்தணிக்கையாளர், வெளி தணிக்கையாளர், மற்றும் சட்ட ஆலோசகர் நிமிப்பது குறித்து.

பொது மகாசபையில் ஆலோசிக்கப்பட்டது இறுதியாக சமூக நலப் பொறுப்பாளர்.முருகவேல்  நன்றி கூறினார் முன்னதாக நிர்வாகிகள் ஏகாம்பரம், சிவகுமார், கமலநாதன், ரோஸ்குமார், 

ரங்கதுரை (காமேஷ்), டாக்டர். ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயற்குழ உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!