அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு மற்றும் மும்முனைப் போட்டி காரணமாகப் பல தொகுதிகளில் வாக்குகள் சிதறியதே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஒரு கட்சி அல்லது வேட்பாளர் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (16.67%) வாக்குகளைப் பெறத் தவறினால் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும் என்ற விதியின்படி, அதிமுக வேட்பாளர்கள் பல இடங்களில் இந்த அளவை எட்ட முடியாமல் போயுள்ளனர்.

 பாரம்பரியமாக வலுவான வாக்கு வங்கிகளைக் கொண்ட தொகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, அக்கட்சியின் தற்போதைய கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!