மகளிருக்கான ரூபாய். 1000 வரவு முதலமைச்சர் உத்தரவு!!
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டசபையில் கடந்த 2023, மார்ச் 27-ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்கட்டமாக சுமார் 1,13,75,492 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2-ம் கட்டமாக கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு, 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக