மாணவ, மாணவிகள் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை மீண்டும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் தொடருமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது பணம் வரவு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்படாது என பேசியிருந்தார். இந்த திட்டம் பொருளாதார வசதி குறைவான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது. குறிப்பாக கல்லூரி கட்டணம், பயணச் செலவு, புத்தகங்கள் வாங்குதல் உள்ளிட்ட அன்றாட கல்விச் செலவுகளுக்கு இந்த தொகை பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!