மங்களதேவி கோவில் திருவிழா: மின்னல் தாக்கியதில் காவலர் உட்பட 10 பக்தர்கள் காயம்!!

தேனி மாவட்டம், கூடலூர் அருகே கண்ணகி கோவிலில் சித்ராபவுர்ணமி விழா இன்று நடந்தது.

மங்களாதேவி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது ஏற்பட்ட பலத்த இடி மின்னலில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மற்றும் 9 பக்தர்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.

இடுக்கி மாவட்ட ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர் (CPO) அன்சாருக்கு மின்னல் தாக்கிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில், இடது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் உடனடியாக சிகிச்சைக்காக பாலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தின் போது மின்னல் தாக்கிய அதிர்வில் கீழே விழுந்த மற்ற பக்தர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தற்போது குமுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் (FHC) அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

காயமடைந்தவர்களின் விவரம்:

மின்னல் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்:

 அன்சார்  காவலர், இடுக்கி DHQ (எலும்பு முறிவு)

 விஷ்ணு: ஆழிமலை, திருவனந்தபுரம்

 தனலட்சுமி (57): சின்னமனூர், தேனி மாவட்டம்

 லோகமணி (59): சின்னமனூர், 

 காளியம்மாள் (51): கம்பம், தேனி மாவட்டம்

 ரம்யா (36) திருச்சூர் கேரளா

 கிரீஷ்:  கட்டப்பனை கேரளா

 அஸ்வதி: கட்டப்பனை கேரளா

 ஸ்ரீலட்சுமி: ஏற்றுமானூர் (கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது)

குறிப்பு: காயமடைந்தவர்களுக்கு உடலில் வெளிப்புற தீக்காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், மின்னல் தாக்கிய அதிர்வினால் ஏற்பட்ட உடல்வலி மற்றும் இதர பாதிப்புகள் காரணமாக அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!