10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது!தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள்வெளியாகியுள்ளன.முதலமைச்சர் விஜய் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். முடிவுகளை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உரிய நேரத்தில் நேரத்தில் முடிவுகள் வெளியிடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் பேசப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் ரிசல்ட்டை வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 94.31% தேர்ச்சி விகிதம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதில் மாணவிகள் அதிக விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக