கன்னியாகுமரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுத்தொகை வழங்கிய டாக்டர். R. ஸ்டாலின் IPS !!

கன்னியாகுமரி மாவட்டம்,கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில்  நடைபெற்ற சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியில், 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பாராட்டு தெரிவித்து பரிசுத்தொகை வழங்கினார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களில் முதல் 11 இடங்களை பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அவர்களின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் பெற்றோர்களின்  அர்ப்பணிப்பை  பாராட்டினார்.

இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்ததுடன், காவல்துறையினரின் குடும்பங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மாவட்ட காவல்துறை தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!