தமிழ்நாடு அனைத்து வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் நற்பணி நலசங்கம், சத்ரபதி சிவாஜி அறக்கட்டளையின் பசியில்லா தமிழகம் அமைப்பின் சார்பாக, மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்ச்சி!!


தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நற்பணி நலச்சங்கம், சத்ரபதி சிவாஜி அறக்கட்டளையின் பசி இல்லா தமிழகம் அமைப்பு  இணைந்து, கோவை காந்திமா நகர், பகுதியில் உள்ள எப்சிஐ குடோன் அருகே, தொழிலாளர்களுக்கு, மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நற்பணி நலச்சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முன்னதாக தொழிலாளர் பெயர் பலகைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் சுமார் 500க்கும், மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த தொழிலாளர்கள், சிற்றுண்டியை பெற்றுக் கொண்டு, தொழிலாளர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த பகுதி மட்டுமின்றி கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஒட்டுநர் பிரிவின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களும், உணவுகளும், இனிப்புகளும் வழங்கபட்டது. குறிப்பாக சரவணம்பட்டி பகுதியில் அசைவ உணவுகள் சுமார் 200 தொழிலாளர்களுக்கு வழங்கபட்டது. 

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி கோவை மாவட்ட தலைவர். பாலசுப்பிரமணியம், ஆவாரம்பாளையம் பகுதி தலைவர் நாகராஜ், காந்திமா நகர் தலைவர் ரத்தினம், கிருஷ்ணன், முத்து, விநாயகபுரம் பகுதி தலைவர் அரவிந்த், ஆட்டோ ஓட்டுனர் பிரிவு மாநகர தலைவர் இசக்கி ராஜன், கட்டட பிரிவு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர். ஈஸ்வரன், மற்றும் சங்கத்தின் அங்கத்தினர்களான பிரபு, அஜித்குமார், ஆனந்த், விஜி, ரமேஷ், கண்ணன், சிவதாஸ், ஈஸ்வரன், உள்ளிட்ட பலரும், இவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!