மதுரை : S.S.காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!

மதுரை மாவட்டம், மதுரை  : S.S.காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.மதுரை: எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினார். 

இந்நிகழ்விற்கு மதுரை மாநகராட்சி கல்வி பிரிவு மேற்பார்வையாளர். தனேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிறுவனர்த் தலைவர் முனைவர். கர்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று, இப்பள்ளியில் படித்த மாணவர் செல்வங்களுக்கு, திறனாய்வு தேர்வு, கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவர்கள் பாராட்டப்பட்டனர். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர் செல்வங்களுக்கு பாராட்டு பரிசும், பாராட்டு சான்றிதழ்களை  வழங்கி சிறப்பித்து சிறப்புரையாற்றினார். மதுரை மாநகராட்சி வட்டார கல்வி மேற்பார்வையாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். டிராவல்ஸ் உரிமையாளர் சதீஸ் கண்ணன், பள்ளி ஆசிரியர்கள்: கண்ணன், ஜெயந்தி, ரீட்டா நித்யா, அனிதா, புஷ்பா, விஜயலட்சுமி ஆகியோர்கள் ஆண்டு விழாவில் பங்கேற்றதுடன் விழா ஏற்பாடு செய்து சிறப்பித்தனர். அத்துடன்   மாணவர் குழந்தைகளின் பல்வேறு விழிப்புணர்வு  கலைகிழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக  தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் முருகலட்சுமி  விழா தொகுத்து வழங்கினர். விழா  முடிவில் மாணவர் ஜமால் நன்றி கூறினார். விழா நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர் பெருமக்கள், முன்னால் மாணவர்கள் உள்ளிட்டோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!