ராணிப்பேட்டை மாவட்ட SC/ST கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள SC/ST அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .

இந்த விழாவிற்கு SC/ST கூட்டமைப்பின் காப்பாளர் மோகன்தாஸ் , ஆலோசகர் வேலாயுதம்,அமைப்புச் செயலாளர் நித்யானந்தம்,பொதுச் செயலாளர் மலையராஜன், பொருளாளர் எழில் ,துணைச் செயலாளர் பெல் பாலாஜி,தணிக்கையாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெல்  விமல் குமார் ( தலைவர்) தலைமை வகித்தார்

இந்த நிகழ்ச்சியில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தவர்கள் நெடுஞ்சாலை துறை சிவசங்கரன் கூட்டுறவுத்துறை அர்ஜுனன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியவர் கூட்டுறவுத்துறை கருணாகரன்.

மேலும் இதில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நன்றியுரை விஸ்வநாதன் அவர்கள் கூறினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!