மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்காலப் போக்குகள்(ICRTET 2026) குறித்த 7வது சர்வதேச கருத்தரங்கம்!!
புதுக்கோட்டை மாவட்டம், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 ஏப்ரல் 20 & 21 அன்று “7வது சர்வதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்காலப் போக்குகள்(ICRTET 2026)” சிறப்பாக நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தின் தொடக்க விழாவை கல்லூரி இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் துவக்கி வைத்தார். கல்லூரி தலைவர் ப்ளோரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.
பேராசிரியர் விவியன் ரேச்சல் ஜெய்சன், கல்வி ஒருங்கிணைப்பாளர், சிறப்பு உரையாற்றினார். முனைவர் ராஜேந்திரன் கலியபெருமாள், கருவி வல்லுநர் மற்றும் பேராசிரியர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, கேப் பிரெட்டன் பல்கலைக்கழகம், நோவா ஸ்கோஷியா, கனடா முதன்மை உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ப. பாலமுருகன் விழாவை வாழ்த்தி பேசினார்.
முனைவர் ச. ராபின்சன், முதன்மையர் (ICT) வரவேற்புரை நிகழ்த்தினார். கல்விசார் முதன்மையர் முனைவர் கு. ஸ்ரீனிவாசன், நன்றியுரையாற்றினார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்காலப் போக்குகள் குறித்த புதிய ஆராய்ச்சித் தகவல்கள் குறித்து கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், மாணவர்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சுமார் 117 ஆய்வு கட்டுரைகள் கருத்தரங்கில் வழங்குவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, அவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு முறைகளிலும் விவாதிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைதலைவர் இளவரசி ஒருங்கிணைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக