மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த சந்திரகலா IAS !!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு அரக்கோணம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 284 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர். ரமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர். வெங்கடேசன் பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், முகவர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக