ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகள் (டாஸ்மாக்) மதுக்கூடங்களுக்கு விடுமுறை -சந்திரகலா IAS !!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வாக்குப்பதிவு நாள்: 23.04.2026 அன்று மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல் 23.04.2026 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரையும் (வாக்குப்பதிவு தினம்) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.05.2026 (திங்கள் கிழமை) அன்றும் முழுவதுமாக "மதுவிலக்கு நாள்" (Dry Day) என கருதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக