நில மோசடியில் ஈடுபட்டு வரும் நபருக்கு உடந்தையாய் செயல்பட்டு வரும் DSP!!


நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் DSP மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் DIG நடவடிக்கை மேற்கொள்வார்களா? பாதிக்கப்பட்ட பெண்ணிறகு நீயாயம் கிடைக்குமா? மதுரை மாவட்டம் காடுபட்டி கிராமத்தில்  சரண்யா என்பவர் பெரிய மருது என்ற நபருக்கு சொந்தமான  இடத்தை கிரையம் பெற்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த சின்ன மருது எனும் நபர் சரண்யா கிரையமாகப் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டு அவர் அனுபவத்தில் உள்ள இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு சொந்தமான இடத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து வரும் சின்ன மருது என்பவர் மீது புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் மேற்படி இடம் சரண்யாவிற்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பினை அகற்றிதரன் கோரி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.ஆனால் காவல்துறை தற்போது வரை இவை சம்மந்தமாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த பெண்ணை காவல் துறையினர் ஆனந்த ராஜ் ( DSP ) சந்திரன் சோழவந்தான் காவல் நிலையம் இன்ஜார்ஜ் மற்றும் விஜயலட்சுமி காவலர் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அலைக்கழித்து வருகிறார்கள் . மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் சின்ன மருது என்பவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவரிடம் சில பல ஆதாயங்களை எதிர்பார்த்து நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நீதிமன்றஉத்தரவுபடி மேற்கண்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பினை அப்புறப்படுத்தி சரண்யாவின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டுமாய் கோரிக்கை எழுந்துள்ளது .

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!