மதுரையில் நட்சத்திர நண்பர் ஸ்டார் D.குருசாமி தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித சங்கிலி நிகழ்ச்சி!!
மதுரை : தேர்தல் விழிப்புணர்வு: மாற்றுத்திறனாளிகள் மனித சங்கிலியில் பங்கேற்பு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற கழகம் மற்றும் ஸ்டார் குரு சேரி டபுள் பவுண்டேஷன் இணைந்து, வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, டாக்டர் துரைராஜ் சாலை முழுவதும் சிறப்பாக அமைக்கப்பட்டது.
இதில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோர் தவழும் மாற்றுத்திறனாளிகள் 21 வகை மாற்றுத் திறனாளிகள் 1000த்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உற்சாகமாக கலந்து கொண்டு, “100% வாக்களிப்போம்.. ஜனநாயகத்தை காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகங்களை வெளிப்படுத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து அமைந்த மனித சங்கிலி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில், அதிகாரிகள் மாணவர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில், மாணவர்களும் பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து, வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த மனித சங்கிலி நிகழ்ச்சி, ஸ்டார் குரு அவர்கள் காலை உணவு தண்ணீர் பாட்டில்கள் மோர் பாட்டில்கள் மற்றும் மதிய உணவு நெய் சோறு தாழ்ச்சா தயிர் வெங்காயம் ஆகியவை வழங்கப்பட்டன ஸ்டார் குரு சேரி டபுள் பவுண்டேஷன் நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற்றதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக