புதுக்கோட்டை அருகே முள்ளங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழா!!
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதழுடன் தொடங்கி பத்துநாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் வீதி உலா நடைபெற்றது. பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு வைரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதேர்வடம் பிடித்து இழுத்து அம்மன் அருள்பெற்றனர். அதேபோல சூரக்காடு செட்டிவிடுதி முள்ளங்குறிச்சி சாந்தம்பட்டி கிராமத்தார்கள் மூன்று இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கறம்பக்குடி பகுதியில் முள்ளங்குறிச்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பிரசித்திபெற்ற கோவிலாகும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து முத்துமாரி யம்மன் அருள்பெற்றுச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக