தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் வெ. மகேந்திர குமார் அவர்களின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!


அரசுத்துறை, பொதுத்துறை  தனியார் துறை , குறிப்பாக பத்திரிக்கை துறை மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள விவசாய த்துறை அனைத்திலும் அன்றாட ம் இந்த உலகத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற உழைப்பாளர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.ஒரு அரசு முன்னேற வேண்டுமானால் அரசு துறையில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசிற்கு பெருமை வந்து சேரும் என்பதில் எள்ளளவும் மையமில்லை. இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக  தமிழ்நாடு அரசு இரட்டை இலக்க  பொருளாதார வளர்ச்சியை எட்டி எட்டுவதற்கு உழைத்த உழைப்பாளர்களுக்கு இந்த பெருமையை, நன்றியை  பறைசாற்றுகிறோம் அவர்களுக்கு பெருமதிப்பிற்குரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

ஒவ்வொரு கிராமத்திலிருந்து அந்த கிராமத்தை முன்னிலைப்படுத்தி வெளிக்கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் விவசாய குடி உழைப்பாளர்கள் பெருமக்கள் போல நகரத்தில் எண்ணற்ற உழைப்பாளர்கள்,  தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள்  இவர்களை காக்கும் காவல்துறை காவலாளர்கள் இவர்கள் அனைவரின் உரிமைகளை பாதுகாக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் உழைப்பாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உழைப்பே உலகை நகர்த்தும் சக்தி! அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.கடின உழைப்பால் உலகை வலம் வரும் தொழிலாளர்கள்  அனைவருக்கும் புரட்சிகரமான மே தின வாழ்த்துகள்.நிம்மதியான ஓய்வும், மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கட்டும். இனிய மே தினம். உங்கள் முயற்சி, எதிர்காலத்தை உருவாக்குகிறது. இந்த மே தினம் உங்கள் பணியில் உள்ள பெருமையையும் சக்தியையும் நினைவூட்டட்டும். உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்களுடன்...வெ.மகேந்திரகுமார் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!