தென்னை மரம் வளர்ப்பு!!

தென்னை மரம் வளர்ப்பு நம் வீட்டு சமையலில் முக்கிய பங்கு வைக்கும் பொருள் தேங்காய். இன்றைய சூழலில் செயற்கை உர  பாதிப்பில் இருந்து தேங்காயும் தப்பிக்கவில்லை தேங்காய் அதிக அளவில் காய்க்க வேண்டும் என்று நிறைய செயற்கை ரசாயன உரங்களை கொடுப்பதால் மறைமுகமாக அதன் பாதிப்பு உபயோகிப்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை தருகிறது. பொதுவாக இரண்டு வகையான தென்னை மர வகைகள் உள்ளது ஒன்று நாட்டு மரம் மற்றொன்று ஹைபிரிட் தென்னை மரங்கள் நாட்டு மரங்கள் நட்டு வளர்ந்த பிறகு அது காய்க்க ஐந்து வருடங்கள் ஆகிறது ஆனால் ஹைபிரிட் மரங்கள்  நட்டு இரண்டு வருடங்களிலேயே காய்க்க தொடங்குகிறது எந்த வகை மரமாக இருந்தாலும் செயற்கை உரங்களை தவிர்த்து முடிந்த அளவு இயற்கையான உரங்களையும் சத்துக்களையும் கொடுக்கும் பொழுது விளைச்சலும் நன்றாக இருக்கிறது அதன் பயன்படுத்தும் போது எதிர் விளைவுகள் என்பது இல்லை. பொதுவாக நல்ல பராமரிப்பில் உள்ள தென்னை மரங்கள் மரத்திற்கு 250 முதல் 300 காய்களை நாம் அறுவடை செய்யலாம். ரகங்கள் :

 குட்டை நெட்டை நெட்டை குட்டை நாட்டு மரம் செவ்விளநீர் மஞ்சள் இளநீர் 

 காய்க்கும் திறன்:

 குட்டை நெட்டை மரங்கள் 18 பாலை  18 மட்டை  வரை காய்ப்பு கொடுக்கும் 

 நாட்டு மரங்கள் 12 பாலை 12 மட்டை என காய்ப்பு கொடுக்கும் 

 ஒரு ஏக்கருக்கு செலவு போக 1 முதல் 1.50 லட்சம் வரை லாபம் எடுக்கலாம். தென்னை மரங்களை சுற்றி  ஊடு பயிர்களை நடுவதன்  மூலமும் மற்றொரு வருமானம் ஏற்றலாம் அதோடு தென்னைக்கு  ஈரத்தன்மையை அதிக நேரம் வைத்திருக்க முடியும்.

 பயிரிடும் முறை: இரண்டடி அகலம் இரண்டடி ஆழம் உள்ள குழிகளை அமைத்து இரண்டு குழிகளுக்கு இடையே 12 அடி இடைவெளி விட்டு குழிகள் அமைக்க வேண்டும் 20 நாட்களுக்கு குழிகளை ஆற வைத்து பின் அந்த குழிக்குள் சிறந்த மண் ஆகிய வண்டல் மண் செம்மண் மணல் மாட்டு உரம், வேப்பம் புண்ணாக்கு போன்ற கலவையை அதிலிட்டு கன்றுகளை பதித்து சுற்றி 2 இரண்டு அடிக்கு வட்டப்பாத்தி அமைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சி ஒரு வருடத்திற்கு இவ்வாறு பராமரிப்பு செய்ய வேண்டும் தொடர்ச்சியாக நீர் பாய்சன் மூலமாக வளர்ச்சி என்பது சரியான அளவில் இருக்கும் நீர் ஆதாரம் குறைவான பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் முறையில் கூட நீர் பாய்ச்சலாம் வெப்பமான மற்றும் மணற்ப்பாங்கான பகுதிகளில் தென்னை மரங்கள் சிறப்பாக வளரும் நாட்டு மரங்கள் மற்றும் குட்டை நெட்டை மரங்கள் 40 முதல் 50 வருடங்களுக்கு மகசூல் தரும் இயற்கையான முறையில் உரங்கள் கொடுப்பது மிக நல்லது குப்பைமண் மாட்டு சாணம் தக்கை பூண்டு செடிகள் வளர்த்து உரமாக இடலாம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக உரம் இடுதல் அவசியம் ஆடி ஆவணி மற்றும் மார்கழி தை மாதங்களில் உரம் இடும் நேரங்கள் ஆகும் குறும்பை உதிர்வை தடுக்க நுண்ணூட்ட சத்துக்கள் மிக அவசியம் தென்னை மரங்களை பொருத்தவரை நோய் தாக்குதல் என்பது குறுத்தழுகல்  நோய் மற்றும் காண்டாமிருக வண்டு ஆகியவற்றின் தாக்குதல் ஒன்று முதல் இரண்டு வருடங்களில் அதிகமாக இருக்கும் தென்னை மரத்தை சுற்றி தென்னை மர கழிவுகள் மற்றும் குப்பைகளின் சேராமல் பார்த்துக் கொள்வது காண்டாமிருக வண்டு உருவாக விடாமல் தடுக்கலாம் என்னென்ன உரங்கள் கொடுக்கலாம் என்றால் தொழு உரம் ஐந்து வயது குட்பட்ட மரங்களுக்கு மாட்டு எரு கோழி  எரு  போன்றவை 30 முதல் 50 கிலோ அளவுக்கு கொடுக்க வேண்டும் மண்புழு உரம் என்பது மரத்திற்கு 5 கிலோ என்ற விகிதத்தில் கொடுக்கலாம் தென்னை மர கழிவுகள் மட்டை நார் தென்னை ஓலை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களை கொடுக்கலாம் பசுந்தாள் உரம் என்பது தக்கை பூண்டு போன்ற பயிர்களை வளர்த்து அதை தென்னை சுற்றி இட்டு புதைக்கலாம் உயிர் உரங்கள் என்பது பாஸ்போபாக்டீரியா அசோஸ்பைரில்லம் போன்ற நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கலாம் வேம் எனப்படும் நுண்ணுயிர் உரம் வேர் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாகும் செயற்கை உரங்கள் என்று பார்த்தால் யூரியா என்பது தழைச்சதாகவும் சூப்பர் பாஸ்பேட் என்பது மணிச்சத் ஆகவும் பொட்டாசியம் என்பது சாம்பல் சத்தாகவும் கொடுக்கப்படுகிறது முடிந்த அளவு இயற்கை உரங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் தென்னையின் வாழ்நாள் அதிகரிக்கும். செயற்கை முறையில் அதிக மகசூல் வேண்டி ரசாயன உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் கெட்டு ஒரு 50 வருடங்களுக்கு பிறகு அந்த மண்ணில் எந்தவித பயிர்களும் விளைவிக்கத் தகாத ஒரு மண்ணாக மாறி நம் வருங்கால சந்ததியருக்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தருவதை தவிர்த்து இயற்கையான முறையில் மண்வளத்தையும் சேர்த்து பாதுகாக்கும் வகையில் தென்னை வளர்ப்பு என்பது வருமானம் ஈட்டும் வாய்ப்பாகவும்  வருங்கால சந்ததிக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!