அறந்தாங்கியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி கும்மியாட்டம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா! வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர். அபிநயா அவர்கள் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வானது நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிராமியக் கலையான தெம்மாங்கு பாடல் கும்மியாட்டம் ஒயிலாட்டம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திடீரென்று தேர்தல் நடத்தும் அதிகாரியும் அறந்தாங்கி கோட்டாட்சியருமான அபிநயா கும்மியாட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தார். இதில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர். சிவகுமார் தேர்தல் துணை வட்டாட்சியர். பாலமுருகன் ஏம்பல் வருவாய் ஆய்வாளர் பைரவி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகளும் மகளிர் சுய உதவி குழுவினரும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக