தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி, இனி என்ன செய்யப்போகிறது மத்திய அரசு!!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போதிய பெரும்பான்மை இல்லாததால் தோல்வி அடைந்துள்ளது.
இது மத்திய அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி
மத்திய அரசு இப்போது இல்லாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொகுதி மறு வரையறை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்.
தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும் என்றால் தொகுதி மறு சீரமைப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்
Delimitation Commission ஐ அமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.
நேற்று மத்திய அரசு கொண்டுவந்த மசோதா தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் இந்த தொகுதி மறு வரையறை மசோதாவை அரசியல் சாசன சட்ட திருத்த (131 st Constitutional Amendment Bill) மசோதாவோடு இணைத்து கொண்டு வந்ததுதான்.
அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தான் Special Majority எனப்படும் மொத்த உறுப்பினர்களில் 03 இல் 02 பங்கு பெரும்பான்மை தேவை(360-362)
இதுவே தொகுதி மறு வரையறை மசோதாவை மட்டும் தனியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு Simple Majority எனப்படும் சாதாரண பெரும்பான்மையே போதுமானது.
சாதாரண பெரும்பான்மை என்பது சுமார் 272 உறுப்பினர்களின் ஆதரவு.
நேற்று மத்திய அரசுக்கு அரசியல் சாசன மசோதாவிற்கு மொத்தம் 298 வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே வெகு விரைவில் மத்திய அரசு மீண்டும் தொகுதி மறு வரையறை செய்வது தொடர்பான மசோதாவை தனியாக கொண்டு வந்து நிறைவேற்றும்.
எப்படி இருந்தாலும் 2023 இல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
அந்த மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அந்த சட்டத்தின் படி எப்படியும் தொகுதிகளை மறு வரையறை செய்துதான் ஆக வேண்டும்.
தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும் என்றால் மறு வரையறை ஆணையத்தை அமைப்பதோடு தொகுதி மறு வரையறை மசோதாவையும் நிறைவேற்றி தான் ஆக வேண்டும்.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது மத்திய அரசு வெகு விரைவில் அதற்கான முன்னெடுப்பை எடுக்கும்.
தொகுதி மறுவரை என்பது தள்ளிப் போய் இருக்கிறதே தவிர அது முற்றிலும் தடுக்கப்படவில்லை...
என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக