“தவறு செய்யும் குழந்தைளை கண்டிக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே அவர்களை அதிகம் நேசிப்பவர்கள்; ”ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிபை;பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழாவில் சிகரம் சதீஷ்குமார் பேச்சு!!


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை ஏற்றார். முதன்மை சிறப்பு விருந்தினராக  பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக ஆர்ட்டிலேண்ட் தொழில்நிறுவன தலைமை செயல் அலுவலர் மற்றும்  தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர், பள்ளியின் மேனாள் மாணவர் எம்.பி. ராம்தன்  ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் வரவேற்புரையாற்றினார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பள்ளியின் மேனாள் மாணவர் பேசும்போது  தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அளவிற்கு தன்னை வளர்த்து ஆளாக்கிய  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளிக்கு மிகப்பெரிய நன்றிகள் என்று குறி;ப்பிட்டார்.

முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிiணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேசும்போது “ ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி; என்றாலே எப்போதும்  வித்தியசம் தான் என்பதற்கு சான்றாக பட்டம்பெறுகின்ற மழலை மாணவர்களை “ரேம்ப் வாக்” செய்ய வைத்து அழகுபார்க்கின்ற இந்த நிகழ்வை குறிப்பிடவேண்டும். பொதுவாக குழந்தைகள் செய்கின்ற குற்றங்களை, தவறுகளை எந்தவொரு பெற்றோர், ஆசிரியர்  கண்டிக்கிறார்களோ அவர்களே அந்தக் குழந்தையை அதிகம் நேசிக்கிறார்கள் என்று அர்த்தம். பிள்ளைகள் ஆசைப்பட்டு கைநீட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருபவர்களைவிட எது சரியானதோ அதை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள்தான்; தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்கள். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு  கல்வியை மட்டும் வழங்காமல் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறன்களைக் கண்டுபிடித்து பயிற்சி கொடுத்து சர்வதேச அளவில், மாநில அளவில் விருதுகள் பெற வைத்து ஆளாக்குகிறார்கள்.  

அந்த வகையில் இந்த நிகழ்வில் மழலையர் பட்டம் பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர்களால் மழலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.விழாவில் பேராசிரியர் அய்யாவு, முனைவர் கருப்பையா,   கவிஞர் மகாசுந்தர், மகாத்மா பள்ளி ரவிச்சந்திரன், கவிஞர் பீர்முகமது. பள்ளியின் மேனாள் மாணவர்கள் வழக்கறிஞர் நவீன்குமார், தொழிலதிபர் ரகூப் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள்  கௌரி, மீனாட்சி, வரலெட்சுமி, பாலசங்கர், மழலையர் ஆசிரியைகள் சந்திரகலா, வரலெட்சுமி  மற்றும் பள்ளியின் மேலாளர் ராஜா, ஆசிரியர்கள், கமல்ராஜ், உதயகுமார், ராமன், சரசு உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக   நிவாஷினி, ஜோ இமானுவேல், சக்தி ரக்ஷனா, சூர்யா, ஹஸ்வந்த் ஆகிய மாணவர்கள் உரையாற்றினர். மழலை மாணவர்களின் கண்கவர் நடனம் கண்கொள்ளாக் காட்சியாக  அமைந்தது. பட்டம்பெற்ற மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து படம் எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்டிருந்த  360 டிகிரி செல்பி பாய்ண்ட்டில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் படமெடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக யுகேஜி மாணவி பிரகன்யா வரவேற்க, நிறைவாக யுகேஜி மாணவி மிருணாளினி  நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் அகல்யா, கன்யா மற்றும் ஆசிரியர்கள்; , ஆனந்தி, சுபஷ்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!