புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் பெறுவோர் பட்டியல் வெளியீடு!!

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2026 பெறும் படைப்பாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் உள்ள சீனு சின்னப்பா மணிமண்டபத்தில் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். 

எழுத்தாளர். நா. முத்துநிலவன் விருதுப் பட்டியலை வெளியிட, வாசகர் பேரவைச் செயலர். பேரா. சா. விஸ்வநாதன், கவிஞர் மு.பா, தொழிலதிபர் அருண் சின்னப்பா, திருக்குறள் பேரவைச் செயலர். ராமுக்கண்ணு, சுதந்திர ராஜன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். நிறைவில் தமிழ்ச் சங்கச் செயலர். மகா சுந்தர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கவி முருகபாரதி, இணைச் செயலர் சு. பீர்முகமது, பொருளாளர் மு. கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன், ஆலங்குடி வெள்ளைச்சாமி, ரோட்டரி கருணாகரன், பாவேந்தர் காசிநாதன், எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா, சோலச்சி, எஸ். டி. பாலகிருஷ்ணன், கவிஞர்கள் மு. கீதா, மைதிலி, நிலவை பழனியப்பன், கண்ணதாசன், கஸ்தூரிரங்கன், திருச்சி ஜெயலெட்சுமி, மாலதி, டெய்சிராணி, புதுகை புதல்வன், வம்பனார் அன்பழகன், நேசன் மகதி, அழகுநிலவன், உஷாராணி, தர்மசேகர், சி. பிரசாத், கல்வியாளர் குமரன், முத்துமணி,  விதைக்கலாம் மலையப்பன், நாக பாலாஜி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விருது பெறுவோர் விவரம்:

நாவல்- சி. அன்னக்கொடி எழுதிய 'கூத்தின் சுவாசம்', மரபுக்கவிதை- புலவர் நாவை சிவம் எழுதிய 'செந்தமிழ் உணர்வுப்பூக்கள்', ஹைக்கூ- ஆழ்வார்குறிச்சி ப. சொக்கலிங்கம் எழுதிய 'கருவானிலொரு சிறுகீறல்'.

கட்டுரை (சமூகம், வரலாறு பிரிவு)- கோ. லீலா எழுதிய 'சோறு- உணவு அரசியல்', மொழிபெயர்ப்பு நூல்- கயல் எழுதிய 'இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்', சிறுகதை- ஆங்கரை பைரவி எழுதிய 'கோணவாச்சி'.

புதுக்கவிதை- துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய 'மகள் கையளித்த மயிற்பீலிகள்', சிறார் இலக்கியம்- ஈரோடு சர்மிளா எழுதிய 'வானி இளையோர் நாவல்', கட்டுரை (கலை இலக்கியம்)- இன்பா எழுதிய 'கடல் தாண்டிய சொற்கள்', சிறந்த சிற்றிதழ்- உதயசங்கர், மணிமாறனின் 'சிறுகதை' காலாண்டிதழ்.

விருதுகள் வழங்கும் விழா!

வரும் மே 2ஆம் தேதி சனிக்கிழமை புதுக்கோட்டை மஹராஜ் மஹாலில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசுகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!