செம்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது - கத்தி, செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்!!

திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த அழகர்நாயக்கன்பட்டி சேர்ந்த துர்காதேவி(28) இவரது கணவர் ஜெய்கணேஷ்(38) இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை.

அதேபோல் துர்காதேவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கலாம்? என்ற சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகணேஷ் கத்தியால் துர்காதேவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து செம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெயகணேசை கைது செய்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மொபைல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!