குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் இவர் கட்டிடம் மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி ஜீவிதா இவரது மகன் மதிரக்க்ஷன் (7) அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இன்று மாலை தனது தாயுடன் தட்டாங்குட்டை அருகே உள்ள ஏரிக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்பொழுது மதிரக்க்ஷன் ஏரியில் உள்ள நீரில் இறங்கியுள்ளார் அப்பொழுது.நிலை தடுமாறி ஏரியில் மூழ்கி. உள்ளான் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தாயுடன் மாடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக