திமுக எச்சரித்தது போலவே பாஜக தனது சதி வேலையை காட்டி விட்டது!!

"மக்கள்தொகை அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்" என்றும்,

 "எந்த ஆண்டுக்கான மக்கள்தொகை என்பதை பாராளுமன்றம் முடிவு செய்யும்" என்றும் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

2027-ல் நடக்க இருக்கும் மக்கள் தொகைஅடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்களவையில் தமிழ்நாட்டின் பிரிதிநிதித்துவம் கணிசமாக குறையும். 

இதை தடுப்பதற்காகத்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை கூடாது என்று 1976ஆம் ஆண்டும், 2001ஆம்ஆண்டும் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அது போன்ற ஒரு சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றுதான் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. 

புதிய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத வட மாநிலங்களின் கையில் அனைத்து அதிகாரங்களும் சென்று சேரும்.

ஒன்றிய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகளுக்குப் பதில் 49 தொகுதிகள் கிடைக்கும் . அதிக தொகுதிகள் கிடைப்பதை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார் என எடப்பாடியும் அண்ணாமலையும் அபாரமான கேள்வி ஒன்றை கேட்கிறார்கள் .

நாம தற்குறியாக இருந்தால் அட ஆமால்ல ! என போய் விடலாம் . ஆனால் அதில் உள்ள சூட்சும் புரியாத அளவுக்கு நாம் தற்குறி இல்லையே .

சின்ன உதாரணம் பார்ப்போம் .இந்த படத்தில் இருப்பது போல இப்போதிருக்கும் 543 சீட்களை மக்கள் தொகை அடிப்படையில்.. 846 சீட்களா அதிகரிக்குறாங்கண்ணு வையுங்க .

தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 39 என்பது 39 / 543 . எனவே நமது பிரதிநிதித்துவம் 7.2% .

அது 49 ஆக உயரும் போது  49/846. எனவே நமது பிரதிநிதித்துவம் 5.8 % ஆக குறையும் .

இப்ப  உத்தர பிரதேசத்தை எடுத்துக்குவோம் . இப்போ அவங்க 89/543 , அதாவது 14.7% . அவங்களுக்கு கிடைக்க இருப்பது 143/ 846, அதாவது... 17%. ஆக அதிகரிக்கும்.

எனவே இந்திய அதிகார அமைப்பில்.. தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வெகுவாக பறிக்க படும்.

அதாவது.. பிரதமரை தேர்தெடுக்க மற்றும் புதிய சட்டங்களை உருவாக்க... இனி வடநாட்டு மக்களின் வாக்குகள் இருந்தால் போதும்.. 

அவர்களால் எல்லாவற்றிலும் சாதித்து கொள்ள முடியும்போது.. தமிழ்நாடு அவர்களுக்கு ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். 

இந்த சதியின் அபாயத்தை உணர்ந்தே.. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!