கடலூர் மாவட்டத்தில் தேர்தல் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கூடுதல் காவல் கண்காணிபாளர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் கர்நாடக ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 4,500 காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் கட்சிக் கொடிகள், பதாகைகள், சின்னங்கள் வைத்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் செய்தல் கூடாது. வாக்குச்சாவடிக்குள்தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக