திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி கே வைரமுத்துஅதிமுக ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் திருமாலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.பின்னர் அவர் திருமயத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் . அவர் பேசியபோது என்னை புரட்சித் தமிழர் இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது காவிரி குடிநீர் திட்டம் 320 கொண்டு வந்துள்ளேன் அரசு பணிமனை போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். நான் கொண்டு வந்த அரசு பணி மனை திட்டத்தை திமுக ஆட்சி வந்த உடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் பணிமனை நிறைவு பெறும் கிராமங்களுக்கு அனைத்து இடங்களுக்கும் பேருந்து வசதிகள் நிறைவடையும். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். இந்த பகுதிக்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திருமயம் தொகுதிக்கு தொழில்பேட்டை அமைத்துக் கொடுத்து பணிகள் வழங்கப்படும். அரிமளம் பகுதியில் காகித தொழிற்சாலை அமைக்கப்படும் விவசாயிகளும் வியாபாரிகளும் பயனடையும் வகையில் குளிர் பதன கிடங்கு அமைத்துக் அமைத்துக் கொடுக்கப்படும். அரிமளம் பகுதியை தனி தாலுகா ஆக்கிட முயற்சி எடுத்துக் கொண்டு வருவேன். இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் திருமயம் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பேன். திருமயம் மலைக்கோட்டை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். மேலும் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து தேர்தல் வாக்குறுதி அனைத்து மக்களுக்கு வீடு தேடி கொண்டு வந்து சேர்ப்பேன். இந்த தொகுதியில் ஒரு கனிமவளத்துறை அமைச்சர் இருக்கிறார். இந்த தொகுதிக்கு எந்த ஒரு திட்டமும் செய்யாமல் கம்மாய் மற்றும் குவாரிகளை சுரண்டி விற்று வருமானத்தை பார்த்து வருகிறார். நான் முதல் முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பின்னர் இரண்டு முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன் இருந்தாலும் மக்களை விட்டு நான் எங்கும் செல்லவில்லை இன்று வரை மக்களோடு மக்களாக தான் இருக்கிறேன். திமுக அரசும் திமுக வேட்பாளரும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். பணத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது. நமது பொதுச் செயலாளர் முதல்வராக இருந்தபோது 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டங்கள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். நடைபெற உள்ள தேர்தலில் நமது கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிமுக செயல் வீரர்களும் நீங்கள் தான் வேட்பாளர் என மனதில் நினைத்து  பணியாற்ற வேண்டும். அப்போதுதான் பெருவாரியான வாக்குறுதி வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் இவ்வாறு அவர் பேசினார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கூட்டணி கட்சியினர் அதிமுக மாநில, மாவட்ட  பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!