குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர். ஷஜே. கே. என். பழனிதலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் facebook,instagram, X, whatapp போன்ற சமூக வலைத்தளங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து வரும் நாட்களில் எவ்வாறு சமூகவலைத்தளங்களில் செயல்படவேண்டும் என்று ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக