கிராம கல்வி வளர்ச்சி முன்னேற்ற சங்கம் சார்பில் கிராம மாணவர்களுக்கான நூலகம் திறப்பு விழா!!
அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் கல்லாறு அருகே கிராம கல்விவளர்ச்சி முன்னேற்ற சங்க அலுவலகம் உள்ளது இங்கு நூற்றுகணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு கிராம கல்வி வளர்ச்சி முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பெர்னாட் பாத்திமா ஏற்பாடுகள் செய்து தலைமையேற்றார் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் முகவர் கலைநேசன் முன்னிலை வகித்து பேசினார் சமூகஆர்வலர்கள் சென்னை ஜோப் சந்திரன் ஆனந்தன் சந்திரன் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர் ஒருங்கிணைப்பாளர் சாந்தி பேசிய போது இந்த நூலகத்தில் அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ், பெண் விடுதலைக்கான புத்தகங்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள், இயற்கை விவசாயம் குறித்தான விழிப்புணர்வு புத்தகங்கள் பூச்சிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் பாதிப்பு, சுகாதாரம், சுற்றுசூழல் சிறுகதை, நாவல்கள் போன்ற அரியவகை புத்தகங்கள் வைக்கபட்டு உள்ளன.. வாருங்கள் அனைவரும் வாசிப்போம் வாசிப்பதன் மூலம் அறிவு, கற்றல் திறனை வளர்த்துக் கொள்வோம் இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்களும் உண்டு என பேசினார் மேலும் தனுஷ் பிரமிளா சந்திரம்மாள் லதா அமீனா ராஜம்மாள் உட்பட நூற்றுக்காண மாணவ மாணவியர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் பெருமூச்சி புளியமங்கலம் கல்லாறு ஆகிய பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் நூலகத்தை திறந்து பார்வையிட்டனர் இறுதியில் சரஸ்வதி நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக