துணை உணவு அவசியமா?

 

துணை உணவு அவசியமா?

நாம் உண்ணும் உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். மாவுச்சத்து கொழுப்பு சத்து புரதச்சத்து விட்டமின் தாது உப்புக்கள் நீர் சத்து நார் சத்துக்கள் போன்ற முக்கியமான சத்துக்களை தினமும் சரிவிகித அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் மாவு சத்து அரிசி கோதுமை சர்க்கரை உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து கிழங்கு வகைகளிலும் உள்ளது 

இச்சத்துக்களை நாம் அதிக அளவில் சேர்க்கும் பொழுது உடல் எடை அதிகரிக்கும் செரிமான பிரச்சனையும் வர வாய்ப்புள்ளது எவ்வளவு அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எந்த வகை சத்தாக இருந்தாலும் அது எதிர் விளைவுகளை உண்டு பண்ணும் கொழுப்பு சத்து என்பது நம் உணவில் சேர்க்கும் எண்ணை உணவுகள் வெண்ணெய் மற்றும் அசைவ உணவுகள் மூலம் நம் உடலுக்கு கிடைக்கிறது இச்சத்தையும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் செரிமான பிரச்சனை உண்டாக வாய்ப்பு உள்ளது புரதச்சத்து முட்டை பால் சோயா பீன்ஸ் பருப்பு வகைகள் மீன் இறைச்சி போன்றவற்றில் கிடைக்கிறது ஆனால் தினமும் நம் உணவில் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை தேடி எடுத்துக் கொள்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் 

விட்டமின் டி ஏ இ பி 12 சி போன்ற சத்துக்கள் பழங்கள் மூலமாகவும் காய்கறிகள் மூலமாகவும் கிடைக்கின்றது எல்லா விட்டமின் சத்துக்களும் நம்முடைய அன்றாட உணவில் சேர்கிறோமா என்றால் கேள்விக்குறி தான் 

நார் சத்துக்கள் காய்கறிகள் பழங்கள் கீரை மற்றும் தண்ணீரில் உள்ளது 

 இவ்வாறு துணை உணவு என்பது பற்றாக்குறை சத்துக்களை ஈடு செய்து நமக்கு தேவையான உணவை சரிவிகித உணவாக மாற்றுவதை துணை உணவு ஆகும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் துணை உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் கர்ப்பிணிகள் வயதானவர்கள் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் கண்டிப்பாக துணை உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் துணை உணவுகள் உட்கொள்ளும் கால அளவை ஆலோசனை பெற்று தொடர்வது நல்லது 

விட்டமின் டி கால்சியம் போன்ற துணை உணவுகள் எலும்பு ஆரோக்கியம் மேம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் புரதச்சத்துக்கள் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது வைட்டமின் சி இரும்பு சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது ஒமேகா 3 இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இன்றைய அவசர உலகில் உணவே மருந்தாக நினைத்து சரியான விகிதத்தில் சத்துக்களை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்பவனே செல்வந்தர் என்பதை உணர்ந்து ஆரோக்கியமாக வாழ பழகுவோம்!

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!