நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷ விழா!!
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ விழா நடந்தது.இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், விபூதி ,புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
படவிளக்கம்: நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளித்த நந்தீஸ்வரர்.
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக