நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற்ற வாக்குச் சாவடிகளுக்கு பெ. வடிவேலு அவர்களுடன்நேரில் சென்று பார்வையிட்ட எழில் கரோலின்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விசிக வேட்பாளர் வழக்கறிஞர்.எழில் கரோலின் அவர்கள், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய பொருளாளர். சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக